"பெட்டியிலே அடைத்து வைத்த
பாம்புதன்னைப்
பிடித்தாட்டத் தெரியாமல்
புலம்புவார்கள்
எட்டிலே இரண்டு
வைத்து ஆட்டினாக்கால்
இருபுறமும் ஆடிவர
எதிரேயேறும்
கட்டிற்குள் நில்லாது
சிரசிலேறும்
கடைவாசல் சுழிமுனையில்
கட்டும்வாசி
கட்டியின்கீழ் திருவாடுதுறைப்
பார்க்கில்
சூரியனும் சந்திரனும்
தோற்றமாமே."
-ஆசான் அகத்தீசர்
பெட்டி என்பது வினாத்தண்டு முடியுமிடம். இதை அடிவயிறெனவும் மற்றும் குண்டலினியை எழுப்பவல்ல
மூலாக்கினி பாம்பு போல் சுருண்டுள்ளதாகவும் சித்தர் மறைபொருளிற் கூறுவர். பாம்பு என்பது இடகலை பின்கலை இரண்டும் கும்பித்து கும்பனருளாற் சேர்க்கப்பட்டு, சுழிமுனையில் வாசி குகனருளால் வசப்பட்டு, அவ்வாசியானது மூலாதாரத்திலுள்ள மூலாக்கினி எனும் குண்டலினியை மேல்நோக்கி எழுப்பவல்ல சக்தியே பாம்பாக உருவகிக்கப்படுகின்றது. எட்டு என்பது அகாரம் இரண்டு என்பது உகாரம். இது இரண்டையும் சேர்ப்பது நம்மால் சும்மா செய்ய முடியாது. இதற்கு ஆசான் முருகப்பெருமான் ஆசி வேணும். தினமும் ஞானிகளை பிரம்ம முகூர்த்தத்தில் பூசை செய்ய வேண்டும். பத்மாசனம் இட்டு ஆசானை நினைத்து மூச்சுக்காற்றை உள்ளே இழுக்க வேண்டும்.
மேலும் கருத்துக்களை அறிய ஞானத்திருவடி நூலை வாங்கி படியுங்கள்! குருநாதர் மகான் அரங்கமகாதேசிகர் அவர்கள் ஞானிகளின் பாடல்களுக்கு தான் உணர்ந்த இரகசியங்களை நம்பால் கருணை கொண்டு எளியமுறையில் அருளிய அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல். இது ஆன்மீக அன்பர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
- ஓங்காரக்குடிலாசான்
ஆதி அகத்தியர் சன்மார்க்க சங்கம்
**************
https://www.youtube.com/
ஞானபண்டிதனின் முதன்மைச் சீடர்களான சித்தர்களே உலகின் முதல் விஞ்ஞானிகள் மற்றும் மெஞ்ஞானிகள்.
மருத்துவம், அறிவியில், வானவியல், தற்காப்புக்கலை, கட்டடக்கலை, வர்மக்கலை என 64 கலைகளையும் தாண்டி 65வது கலையாகிய சாகாக்கலை எனும் மரணமிலாப் பெருவாழ்வு, இதர விஞ்ஞானம் மற்றும் மெஞ்ஞானம் என இவர்கள் தொடாத இடமே கிடையாது.
சித்தர் மருத்துவம், சித்தர் வர்மக்கலை, சித்தர் நூல்கள், சித்தர் பாடல்கள், சித்தர் வாக்குகள், சித்தரியல் ஒலி/ஒளி நாடாக்கள், ஓலைச்சுவடிகள், சீவநாதச் சுவடிகள் மற்றும் பல சித்தரியல் தகவல்களைப் பெற இணையுங்கள்.
https://www.youtube.com/
நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil
Posted by Nathan Surya
bbb3
No comments:
Post a Comment