Thursday, November 8, 2018

இறை அருளாசியை எவ்வாறு பெறலாம்..?!



யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே.
- திருமந்திரம்

நாம் பார்க்கின்ற மனிதர்கள் அல்லாத மற்ற உயிரினங்களின் மீது அன்பு செலுத்த சொல்கின்றார் மகான் திருமூலர். பசுவிற்கு ஒரு வாய் புல்லாவது கொடுங்கள் என்கிறார் மகான் திருமூலர். நம்முடய மனதில் மற்ற உயிர்கள் மீது அருள் இல்லைஎனில் எப்படி கடவுளுக்கு நம் மீது அருள் வரும்?

கொடும் சொற்களைப் பேசி மற்றவர் மனதைப் புண்படுத்தாமல் இனிமையான வார்த்தைகளை பேசினாலே போது அதுவே கடவுளுக்கு பக்கமாக செல்லும் வழி என்று நான்காம் அடியில் சொல்லுகின்றார் மகான் திருமூலர்.

- ஓங்காரக்குடிலாசான்

ஓங்காரக்குடில் Ongarakudil
 



நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 
bbb3


No comments:

Post a Comment