Wednesday, November 7, 2018

ஆசான் திருவள்ளுவர்



மகான் திருவள்ளுவப்பெருமான் பிறவிக்கு காரணமானதை அறிந்தவர். பிறவிக்கு என்ன காரணம்? இந்த மும்மலமாகிய தேகம்தான் காரணம். அறியாமையை உண்டு பண்ணக்கூடிய இந்த தேகத்தை நீக்கினால் மரணமிலா பெருவாழ்வைப் பெறலாமென்ற இரகசியத்தை அறிந்தவர் ஆசான் திருவள்ளுவர்.

ஆசான் திருவள்ளுவர் முற்றுப்பெற்ற முனிவர். மரணமிலா பெருவாழ்வு பெற்றவர். அவர் எழுதிய நூல்கள் பிசிறு இல்லாமல் தெளிவாக இருக்கும். எந்த காலத்துக்கும் பொருந்தும். இந்த காலத்துக்குத்தான் பொருந்தும், இந்த காலத்திற்கு பொருந்தாது என்று சொல்ல முடியாது. எல்லா காலத்துக்கும் பொருந்தக்கூடிய நூலை எழுதியிருக்கிறார். என்ன காரணம் என்றால் அவர் வீடுபேறு அறிந்தவர், மரணமிலா பெருவாழ்வு பெற்றவர், அறியாமை நீங்கியவர். அறியாமை நீங்கியதால்தான் அப்படிப்பட்ட நூலை அவரால் எழுத முடிந்தது. அறம், பொருள், இன்பத்தைப் பற்றி எழுதியிருக்கிறார், வீடு பேறைப் பற்றியும் எழுதியிருக்கிறார். அதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

மற்ற நூல்களில் அறத்தைப் பற்றியும், பொருளைப் பற்றியும், இன்பத்தைப் பற்றியும் பேசுவார்கள். இன்பம் என்பது ஆணும் பெண்ணும் கூடி வாழ்கின்ற வாழ்க்கை. அது இல்லறமாகும். உலக அறிஞர்கள் எல்லோரும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும், இனிமையாக பேச வேண்டுமென்று சொல்வார்கள்.

வீடுபேறு என்றால் மரணமிலா பெருவாழ்வு அல்லது மோட்சலாபம். மனிதனுக்கு மரணமிலா பெருவாழ்வு உண்டு என்பதை அறிந்தவர்கள் நமது ஞானிகள். மகான் இராமலிங்க சுவாமிகள் முதற்கொண்டு ஆசான் அருணகிரிநாதர் வரை மரணமிலா பெருவாழ்வு என்ற வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்.

விஞ்ஞானமும், மெய்ஞானமும் இரண்டு கண்கள் போன்றது. ஒன்றை ஒன்று அவமதிக்கக்கூடாது. இதற்கும் அதற்கும் பகையில்லை, நட்புதான்.இந்த விஞ்ஞானம் உடம்பைப் பற்றி அறிகின்ற அறிவாகும். உடம்புக்கு நோய் வந்தால் விஞ்ஞானத்தால் குணமாக்கலாம் என்று சொல்லலாம். நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கலாம். ஆனால் இந்த விஞ்ஞானம் உடம்பை காப்பாற்ற மட்டும்தான் பயன்படும்.

விஞ்ஞானத்தால் தயாரிக்கப்பட்ட கருவிகளும், மருந்துகளும் மனிதவர்க்கத்துக்கு ஒரு சிறந்த வரப்பிரசாதம்தான். ஆனால் அது மனிதன் மட்டுமே அடையக்கூடிய மோட்ச லாபத்தை தர வேண்டுமல்லவா?

மோட்ச லாபம் என்பது உடம்புக்குள்ளே சூட்சுமதேகம் அல்லது ஒளி உடம்பு என்ற ஒன்று இருக்கிறது. அந்த ஒளி உடம்பைப் பற்றி அறியணும். ஒளியுடம்பை அறிவதற்கு பக்தி ஒன்றுதான் வழி. ஒளி உடம்பை பெற்றவர்கள் அதை வீடுபேறு, மோட்சலாபம், முக்தி அல்லது முக்திநெறி என்று சொல்லுவார்கள். அதைப்பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அந்த ஒளிஉடம்பை பெற்றவர்களிடம் பக்தி செலுத்தணும், அவர்களிடம் அன்பு செலுத்தணும் என்பார்கள்.

பக்தி எதற்கு செலுத்த வேண்டும்? மோட்சலாபம் அடைவதற்கு. மோட்சம் அல்லது வீடுபேறு அல்லது முக்திநெறி அடையவேண்டுமென்றால் பக்தி செலுத்தணும். பக்தியை யாரிடம் செலுத்துவது?
நாம் செலுத்துகின்ற பக்தியெல்லாம் ஒரு வகையில் சிறுதெய்வ வழிபாட்டில் போகும். அவரவர்கள் அறிவுக்கு ஏற்ற மாதிரி பக்தி செலுத்துவார்கள். ஞானிகளெல்லாம், முற்றுப் பெற்றவனாகவும், எவன் மரணமிலா பெருவாழ்வு பெற்றானோ, எவன் எக்காலத்தும் அழியாது இருக்கிறானோ அவனுடைய ஆசி பெறுவதற்காக ஞானிகள் பக்தி செலுத்துவார்கள். அவர்களுடைய ஆசியை பெறணும்.

மகான் திருவள்ளுவபெருமான் பிறவிக்கு காரணமானதை அறிந்தவர். பிறவிக்கு என்ன காரணம்? இந்த மும்மலமாகிய தேகம்தான் காரணம். அறியாமையை உண்டு பண்ணக்கூடிய இந்த தேகத்தை நீக்கினால் மரணமிலா பெருவாழ்வைப் பெறலாமென்ற இரகசியத்தை அறிந்தவர் ஆசான் திருவள்ளுவர்.

எனவேதான் எக்காலத்திலும், எந்த சக்தியாலும், எந்த விஞ்ஞானியாலும், எந்த அறிஞராலும் புறக்கணிக்க முடியாததாகவும், இது தேவையில்லை என்று சொல்லக்கூடிய நூலை அவர் எழுதவில்லை. 1330 குறளும் அப்பேர்ப்பட்ட முதுபெரும் தலைவனால் எழுதப்பட்டது. அவர் பிறவி நீங்கியவர் பிறவிக்கு காரணமாகிய பேதைமையை நீக்கினவர்.

ஆக இந்த தேகத்தை அறிந்து அதிலுள்ள மாசை நீக்க வேண்டும். இந்த தேகத்தில் இருக்கும் அழுக்கு, மாசு அல்லது மும்மலக்குற்றம் என்று சொல்லப்பட்ட ஆணவம், கன்மம், மாயை அல்லது மல, ஜல, சுக்கிலம் என்ற இந்த கசடை நீக்கியதால்தான் அவன் இனி பிறக்க மாட்டான். அவனே பேதைமை நீங்கியவன்.

-அடிகளார் ஆறுமுக அரங்கமகாதேசிகர்

No comments:

Post a Comment