Friday, November 16, 2018

தமிழ்மறை திருமந்திரம் கற்போம்

திருமந்திரம்

தமிழ்மறை திருமந்திரம் கற்போம்



வேற்றுமையை ஒழிப்போம்!
ஒற்றுமையை வளர்ப்போம்!

"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே.'

- ஆசான் திருமூலர்.

பிறப்பால் எவரும் பிராமணர் ஆகமுடியாது.

எவ்வுயிரையும் தன்னுயிர் போலப் போற்றி, தன் எண்ணம், தான் செய்கின்ற செயல் எதிலும் அறவழியைக் கடைப்பிடைத்து, இறையை அடைந்த ஞானிகள் / சித்தர்களே மெஞ்ஞான அந்தணர் ஆவர். இன்று மனிதரில் சிறு கூட்டம் பிற மனிதரையே தீண்டத்தகாதவர் எனக் கூறிச் சில வேத, ஆகமங்களைப் பொருளுணராது கற்றுத் தம்மைத் தாமே அந்தணர் என்றும், உயர்குலத்தோர் என்றும் பொய்யுரைக்கின்றனர். இவர்கள் முத்திநெறி அறவே அறியாத மூர்க்கர் கூட்டம் ஆகும். இவர்கள் சொல்லும், செயலும் படுபாதகம் ஆகும்.

"பேர் கொண்ட பார்ப்பான்
பிரான் தன்னை அர்ச்சித்தால்
போர் கொண்ட நாட்டுக்குப்
பொல்லா வியாதியாம்
பார் கொண்ட நாட்டுக்குப்
பஞ்சமும் ஆம் என்றே
சீர் கொண்ட நந்தி
தெரிந்து உரைத்தானே."

- ஆசான் திருமூலர் -

தம் பெயரில் மட்டுமே(பிறப்பால்) பார்ப்பான்/ பிராமணன்/ அந்தணன் என்போர் எம்பிரானை அர்ச்சனை செய்யத் தகுதியற்றவர்கள். அப்படி அவர்கள் செய்தால் அந்த நாட்டுக்கும், அரசனுக்கும் தாங்கொணா வேதனைகளும், நாட்டு மக்களுக்கும் பொல்லாத வியாதிகளும், பஞ்சமும் வந்துசேரும் என்பதை தன்னாசானான சித்தபெருமான் நந்தீசர் உரைத்ததாகக் கூறுகிறார் ஆசான் திருமூலர். இதன் மூலம் ஆசான் திருமூலர் சொல்வது பிறப்பால் / பெயரால் யாரும் இறையை அர்ச்சிக்கும் தகுதியைப் பெறமாட்டார். மெய்யாக அறவழியில் நிற்கும் அனைவருக்கும் இறையை அர்ச்சிக்கும்(பூசிக்கும்) தகுதியுண்டு. அவர்களே ஈற்றில் இறையுடன் இரண்டறக் கலக்க வல்ல 'அறவாழி அந்தணர்' (சித்தர்/ஞானிகள்) ஆவார்கள்.

இங்கு யாருமே பிராமணர் கிடையாது. பிறப்பால் யாரும் பிராமணர் ஆகமுடியாது

"சத்தியம் இன்றித்
தனிஞானந் தானின்றி
ஒத்த விடயம்விட் டோரும்
உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப்
பரன்உண்மை யுமின்றிப்
பித்தேறும் மூடர்
பிராமணர் தாம்அன்றே. "

-ஆசான் திருமூலர்-

சத்தியம், ஞானம், இறையுணர்வு, இறையன்பு எதுவுமே இருக்காது. ஆனால், தம்மைத் தாமே உயர்ந்த பிராமணர் என்போர் பித்தேறிய மூடரேயன்றி பிராமணராகார் என்கிறார் ஆசான் திருமூலர். இது பிறப்பில் தாமே பிராமணர் என்றும், வார்த்தையில் மட்டும் எல்லாவுயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதாகக் கூறிச் சகமனிதரையே தீண்டத்தகாதவர் எனக் கூறி உலகை ஏமாற்றும் பித்தேறிய மூடருக்காகக் கூறப்பட்டுள்ளது.

பிறவாநெறி (சகாக்கல்வி / மரணமில்லாப் பெருவாழ்வு) அறிந்த ஆசான் திருமூலரின் குருவாகிய ஆசான் நந்தீசர் போன்ற, ஆதியாகிய இறையுடன் இரண்டறக் கலந்த ஞானிகள்/ சித்தர்களே 'அறவாழி அந்தணர்கள்' ஆவார்கள்.

"பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதிப் பராபரன்
உறவாகி வந்தென் உளம்புகுந் தானே."

-ஆசான் திருமூலர்

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
-ஆசான் திருவள்ளுவர்

எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு அறவழி வாழ்பவர் எவரோ, அவரே அந்தணர்.

யாரையும் நோகடிப்பதல்ல எமது நோக்கம். தமிழர் வேதங்களான திருமந்திரம், திருக்குறள், திருவாசகம், திருவருட்பா போன்ற எண்ணற்ற தமிழ்மறை நூல்களில் மனிதரில் எந்தவிதப் பிரிவினையும் பிறப்பால் இருப்பதாக இல்லை. உண்மையை உரக்கச் சொல்வதே நம் பணி.

"ஒன்றே குலம், ஒருவனே தேவன்" 

- ஆசான் திருமூலர்.

வேற்றுமையை ஒழிப்போம்!
ஒற்றுமையை வளர்ப்போம்!

"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே.'

- ஆசான் திருமூலர்.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் என்றார். எல்லா தெய்வத்தையும், ஒன்றாக பார்க்கக்கூடிய அறிவை உனக்கு தலைவன் தந்திருக்கின்றார்.

தலைவனை அறிமுகப்படுத்த வேண்டும். தலைவன் ஆசான் ஞானபண்டிதன்தான் என்றும், ஒருமுறை ஆசானை நினைத்தாலே போதும், செய்த பாவங்களையெல்லாம் பொடியாக்கி, வாழ்க்கையில் வெற்றி பெறச்செய்வான்.

ஆன்மா ஆக்கம் பெற ஞானபண்டிதன் சுப்பிரமணியர் நாமத்தை ஜெபிப்போம். ஒருவன் பல ஜென்மங்களில் செய்த புண்ணியத்தினால் மட்டுமே ஞானிகள் திருவடிகளை பற்றுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு கோடி தவம் செய்த மக்கள்தான் ஆசான் அகத்தீசரை வணங்கி ஆசி பெறலாம். ஞானிகளை நினைக்க முடியும். இல்லையென்றால் அறிய முடியாது.

மரணமில்லாப்பெருவாழ்வை தரக்கூடிய ஆசான் ஞானபண்டிதனை நீ அறிந்திருந்தாலும், அவர்களுக்கு அது புரியக்கூடிய காலம் வரவில்லை. அந்த வாய்ப்பு அவனுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.

ஆசான் திருமூலர் திருவடிகள் போற்றி.


Contact Book Stall: +919095633344





Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html






Posted By Nathan Surya

அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு

அகத்தியப்பெருமானின்  அருள்வாக்கு


இறைவன் அருளாலே மாயையை வெல்ல வேண்டும் என்று புறப்பட்ட மனிதன் வென்றதாகத் தெரியவில்லை. இன்னும் கூறப்போனால் "இது மாயை, இது மாயை இல்லை" என்று ஒரு மனிதன் எண்ணும்பொழுதே அவன் மாயைக்குள் சிக்கி விடுகிறான். ஒரு மனிதனின் தாயைப் போல் அவனுடன் இரண்டற கலந்திருப்பதே மாயைதான். அறியாமையின் உச்சம், பாசத்தின் உச்சம், ஆசையின் உச்சம், எதிர்பார்ப்பின் உச்சம், தேவைகளின் உச்சம் – இப்படி மனித எண்ணங்களில் எவையெல்லாம் மகிழ்ச்சி என்று அவன் இதுவரை எண்ணிக்கொண்டு வாழ்கிறானோ அவற்றின் அத்தனை கூறுகளையும் பார்த்தால் அது மாயையின் விழுதுகளாகவே இருக்கும். பின் எப்படித்தான் வாழ்வது? வாழ்க்கையை எதிர்கொள்வது? என்றால் உடலால் வாழ்வது ஒரு வாழ்வு. சிந்தனையால் வாழ்வது ஒரு வாழ்வு. வெறும் உடலால் வாழ்வது மிருக வாழ்வு. அதனையும் தாண்டி சிந்தனையால் வாழ்வதும் அந்த சிந்தனையும் அற சிந்தனையாக இருப்பதுமே இறை நோக்கி செல்வதற்குண்டான படிகளாகும். எல்லாவற்றையும் ஒரு உன்னத ஞானியின் பார்வையிலே பார்க்கப் பழகுவதும் எது நிலைத்ததோ, எது நிலைக்குமோ, எது நிலைத்த தன்மையை தருமோ, எது தீய பின் விளைவுகளைத் தராத ஒரு நிலையோ, அஃது எஃது? அதை எப்படி உணர்வது? அதற்காக யாது செய்வது? என்று சதா சர்வ காலம் சிந்தித்து வாழ்வதே அற சிந்தனையாகும்.

இயல்பாகவே ஒருவனிடம் ஏராளமான ஆஸ்தி இருப்பதாக்க கொள்வோம். அஃது அன்னவனுக்கு பெரிதாகத் தோன்றாது. இருக்கின்ற ஆஸ்தியெல்லாம் சிக்கலில் மாட்டி, தன் கையை விட்டுப் போய்விடுமோ என்கிற சூழல் வந்து அந்த அபாயத்தை அவன் தாண்டி, மீண்டும் அவன் எண்ணுகின்ற அந்த பெருஞ்செல்வம் அவன் கையிலே கிட்டினால், அது அவனுக்கு பெரிதாகவே தோன்றுகிறது அல்லது இயல்பாகவே தேகம் நன்றாக இருக்கும்பொழுது யாதொன்றும் தோன்றுவதில்லை மாந்தனுக்கு. ஒரு சிறு குறை ஏற்பட்டு அந்தக் குறை என்று அகலும் என்று எண்ணி, எண்ணி, ஏங்கி குறை அகன்றவுடன் சற்றே நிம்மதி கொள்கிறான். இறைவன் அருளாலே கூறுங்கால் அவன் கையில் இருக்கும் தனம் கையிலே இருந்தால் பெரிதாகத் தோன்றுவதில்லை. கையிலே இருக்கும் தனம் தொலைந்து கிட்டினால், பெரிதாகத் தோன்றுகிறது. இந்த மனித இயல்பும் மாயைக்கு உட்பட்டதே. எனவேதான் மாயை குறித்து எம்போன்ற மகான்களும், ஞானிகளும் அவ்வப்பொழுது மாந்தர் குலத்தை எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கிறோம்.

பொதுவாகவே, வாழும் மகான்கள் என்று பலரை மனிதர்கள் நாடுகிறார்கள். அதை நாங்கள் குறையோ, குற்றமோ கூறவில்லை. அதாவது ஒருவன் இந்த ஜீவ அருள் ஒலையை நம்பி, நாடி, இதன் கருத்துக்களை ஏற்கத் துவங்கும்பொழுது நாங்கள் இறைவனருளால் கூறுகின்ற கருத்தையெல்லாம் 100 – க்கு 100 பின்பற்றி, அதன் வழியாக நடக்க, நடக்க மெய்யான ஞானிகளை இவன் தேட வேண்டாம். மெய்யான ஞானிகள் இவனைத் தேடி வருவார்கள். அதுதான் ஏற்புடையது. அங்கு ஞானி இருக்கிறார், இங்கு ஞானி இருக்கிறார் என்று தேடி சென்றால், அதனால் தேவையில்லாத குழப்பங்கள்தான் ஏற்படும். எத்தனைதான் மிகப்பெரிய ஞானியாக இருந்தாலும் கூட, இந்த பூமியிலே பிறவி எடுத்துவிட்டால் சில விரும்பத்தகாத குணங்களும் அவரிடம் இருக்கலாம். அப்பொழுது என்னவாகும்? அந்த ஒரு பகுதியைப் பார்க்கின்ற மனிதன் தவறாகப் பார்ப்பான். நாங்கள் நல்லவற்றை எடுத்துக் கூறினால் "சித்தர்களே இப்படியெல்லாம் உயர்வாகக் கூறுகிறார்களே? எங்கள் பார்வைக்கு அப்படித் தோன்றவில்லையே?" என்று ஒருவன் கூறுவான். எனவேதான், சமகாலத்தில் வாழ்கின்ற ஞானிகள் குறித்து நாங்கள் எந்த விளக்கமும் தர விரும்புவதில்லை.

via சித்தனருள்
Sithanarul

Related Articles


2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html





Posted By Nathan Surya

Monday, November 12, 2018

Sunday, November 11, 2018

பகையை நீக்கிட முருகன் அருளாசி



முருகா என்றால் :
Aum Muruga ஓம் மு௫கா
பகைவனையும் நட்பாக்கிக் கொள்கின்ற பண்பைப் பெறலாம். அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்கையும் அறிந்து தேர்ந்து கடைத்தேறிய ஞானிகளால் மட்டும்தான் பகைஉணர்வு இல்லாமல் இருக்க முடியும்.

சாதாரண மனிதன் வினைக்குற்றத்திற்கு உள்ளானவன். ஆதலின் அவனிடம் வினைக்குற்றத்தினால் பிறிதொருவர் மீது நட்பு ஏற்படுவதும் பிறிதொருவர் மீது பகை ஏற்படுவதும் இயல்பே.

அவரவர் முன் செய்திட்ட பாவபுண்ணியங்களுக்கு ஏற்பதான் நட்பும் பகையும் அமைகிறது. முன் செய்த பாவத்தின் காரணமாக பகை ஏற்பட்ட போதும், அதை பகையற்ற நட்பே வடிவான ஞானிகள் துணை கொண்டு தமக்குற்ற பகையை நட்பாக்கிக் கொள்ள வேண்டும். பகையை நீக்கி நட்பாக்கி கொள்ள வேண்டுமே அன்றி பகைமை பாராட்டி நரகத்தில் வீழலாகாது.

ஒருவன் தமக்கு முன்பு செய்த இடையூறுகளை அவ்வப்போது மறந்து விடல் வேண்டும். எப்படி காய்கறிகளில் உள்ள குற்றமான கோம்பை நீக்கி காயை சமைக்கிறோமோ அதுபோல அவரிடத்து உள்ள குற்றங்களை மறந்து நன்மைகளை மட்டும் எண்ணி ஏற்று பகையை மறத்தல் வேண்டும். ஏனெனில் பகை நமது வினையால் வந்த குற்றமாகும். பகை தாங்கி வருவது மட்டுமே மற்றொருவன் செயல். ஆதலின் தாங்குபவனை மறந்து தம்வினைக் குற்றம் என்று நினைத்து தாங்கி வந்தவனை நட்பாக்கிகொண்டு, மேல்வினை குற்றத்திலிருந்து தப்பித்துவிடல் வேண்டும்.

இவ்விதமாய் பகையை நீக்கிட அவர் தம்மிடம் மனம் விட்டு பேசியும் தாம் செய்திட்ட செயல்களை அவரிடத்து சொல்லி குற்றங்களை மன்னித்தும், பிறர் தமக்கு செய்த இடையூறுகளை தமது வினை என எண்ணி பொறுத்துக் கொண்டும் பகை கொள்வதிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும். தூயமனம் பெற்றால்தான் இவை வரும். தூயமனம் பெற தூயவனாம் குருநாதன் வழிகாட்டல் அவசியமாம். ஞானகுருநாதன் சொற்குரு வழிகாட்டல்தனை குருமனம் மகிழ நடந்து பெற்று குருநாதர் தம்மிடம் மானசீகமாக பகை நீங்கிடவே விண்ணப்பித்து சொற்குரு உபதேச வழி நடந்து நடந்து பகை நீக்கிடல் வேண்டும்.

முருகன் அருள் கூடிட பகைதானே நீங்கும். முருகன் அருளைப் பெற்று பகை நீங்கி பகைமை பாராட்டாது உலகினர் அனைவரிடத்தும் நட்பு பாராட்டி நல்லோராய் வாழுங்கள். உலகில் உள்ள எழுநூறு கோடிக்கும் மேலான மக்களில் மனிதனாகிய நாம் நம்முடன் சார்ந்த ஒரு சிலரிடம் மட்டுமே நட்பாயும், பகையாயும் உள்ளோம். அனைவரிடத்தும் நாம் அவ்விதம் இல்லை. ஆதலின் நட்பும் பகையும் நமது முன் சென்ம தொடர்பினிலே வருகின்றது

ஆதலால் அவை முன்சென்ம வாசனையால் வந்திட்ட வினைக் குற்றங்களே என்று உணர்ந்திடல் வேண்டும். பகை திடீரென தோன்றுவதில்லை. பகை நட்பு கொண்டோர் தம்மிடம் உள்ள குறைகளை காண காண அந்த குறைகளை பெரிதாக எண்ணிட பகையாய் மாறுகிறது. நட்பிலிருந்துதான் பகை தோன்றுமே அன்றி வெளியிலிருந்து சம்பந்தமில்லாமல் வருவது இல்லை. ஆதலின் பிறர் தமக்கு செய்த இடையூறுகளை துன்பங்களை மறந்து அவர் செய்த நன்மைகளை சிறிதாயினும் கவனத்தில் கொண்டு அதன் பொருட்டு அவர் செய்த துன்பங்களை மன்னித்து ஏற்றுக் கொண்டு நட்பை வளர்த்தால் பகை என்ற பேச்சுக்கே அங்கே இடமில்லை.

பகையை நீக்கி நட்புடன் வாழ்வோம். முருகா! முருகா! என்றே முருகன் அருள்பெற கூவுவோம். முருகனருளால் பகை நீங்கி நட்புறவான வாழ்வை வாழ்வோம்.

-மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்
ஆதி அகத்தியர் சன்மார்க்க சங்கம்




Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html





Posted By Nathan Surya

உடற்கூறு கணிதம்: 21600 மூச்சுக்காற்று

உடற்கூறு கணிதம்: 21600 மூச்சுக்காற்று


#முருகப்பெருமானின் சீடர்களான 

#தமிழ்ச்சித்தர்கள் வகுத்த #உடற்கூறுகணிதம்!

எண்ணும் எழுத்தும்: 21600 மூச்சுக்காற்று


தமிழ்ச் சித்தர்கள்
__________________
வகுத்த
__________________
உடற்கூறு கணிதம்!

__________________
எண்ணும் எழுத்தும்!

21600 மூச்சுக்காற்று

உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே உயிரின் இயக்கமாகும். சித்தர்களின் கணக்குப்படி மனிதனின் மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும். சீவ தேகத்தில் இயங்குகின்ற உயிர்க்காற்று, உச்சுவாசம் (உட்செல்லுதல் 10800/நாள்), நிச்சுவாசம் (வெளியேறுதல் 10800/நாள்) சேர்ந்து ஒரு மூச்சாக விளங்குவது. இப்படி ஒரு தினத்தில் 21,600 மூச்சு நாம் விடுகின்றோம். இம் மூச்சு ஒவ்வொன்றிலும் ஆன்ம சக்திக் கலை (அ+உ = ய) பத்தும் கலந்து வெளிப்பட்டுக் கொண்டே உள்ளது. ஆகையால் நாளொன்றுக்கு வெளிப்படுவது, (21,600 X 10 )= 216000 ஆன்ம சக்திக் கலைகள்.

சரம் என்றால் மூச்சுள்ளது. அசரம் என்றால் மூச்சில்லாதது. இவையே சித்தர்கள் உலகை அழைப்பதற்குரிய வார்த்தையாக சராசரம் என்று கூறுகிறார்கள். இந்த உலகமே மூச்சை அடிப்படையாக வைத்தது என்பதற்காகவும், அது முட்டையின் வடிவத்தை ஒத்திருப்பது என்பதற்காகவும், அண்ட சராசரம்(அண்டம் என்றால் முட்டை என்று பொருள்) என்று அழைத்து வந்தனர்.

1நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு 21,600 மூச்சும் ஓடுகின்றது. உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கும் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும். ஆனால் உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஒடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும,; உடலுறவின் போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.

அருளொலி வீசும் ஆன்மா (அ+உ+ம்=) ஓம் என்றும் அதில் அவும் (8) உவும் (2) சேர்ந்து பத்தாக, ம் – ஆறாக உள்ளது. இதில் 10 நாதமாகவும் 6 விந்தாகவும் கூறப்படும். இதன் கலப்பு (10 X 6) = 60 நாத விந்து கலையாகவும் கூறப்படும்.

இது கொண்டு, ஆன்மானுபவ ஞானிகள், தினம் வெளிப்படுகின்ற 216000 ஆன்ம சக்திக் கலைகளை, 60 ஆகிய நாத விந்து ஆன்ம கலையாற் பகுத்து, காலக் கணக்கு கண்டுள்ளனர்.

அதாவது 60 கலை ஒரு வினாடி என்றும், 60 விநாடி (60 X 60 = 3600 கலை) ஒரு நாழிகை ஆகவும், 60 நாழிகை (60 X 60 X 60 = 216000 கலை ஒரு நாளாகவும் விளங்குகின்றதாம்.

ஒரு நாளில் ஓடக்கூடிய மூச்சுக்களின் எண்ணிக்கை 21,600 என்று பார்த்தோம். சிதம்பரத்தில் உள்ள ஆனந்தமய கோசத்தில் தான், நடராஜர் நடனமிடும் சிற்சபை எனும் பொன்னம்பலம் அமைந்துள்ளது.இந்த சிற்சபைபை உடற்கூறு கணிதத்தின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றது. சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தில் 64 கை மரங்கள் உள்ளன. இந்த 64ம் 64வகையான கலைகளாகும். பொன்னம்பலத்தின் 21600 தங்க ஓடுகள் உள்ளன. இவை ஒரு மனிதனின் ஒரு நாளுக்கான சராசரி மூச்சுக் காற்றுக்கான எண்ணிக்கை. 5 வெள்ளிப் படிகள் உள்ளன. இவை ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தினையும் (பஞ்ச பூதங்களையும்) குறிப்பன.இதையே விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல மதி என்றால் சந்திரன் 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.

வான்வெளி ஆராய்ச்சியின் அடிப்படைக் கல்வி என்னவென்றால் மூச்சே நேரம். இதுவே அனைத்து வேதங்களும், சித்தர்களும், ரிஷிகளும், மகான்களும் சொல்வதும்.

நாம் விடும் மூச்சானது உள்ளே வெளியே என்று இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது. காலச்சக்ரம் என்பது நாம் விடும் மூச்சைக் கொண்டும், நேரத்தைக் கொண்டும், வான்வெளியைக் கொண்டும் கணக்கிடப்படுவது.

10 வார்த்தைகளைக் கொண்ட அட்சரத்தை உச்சரிக்க நமக்கு ஒரு மூச்சை அதாவது நான்கு விநாடி செலவு செய்ய வேண்டியது இருக்கும்.

மூச்சின் கணக்கு:

1. ஒரு நாள் நாம் விடும் மூச்சு 21600 . இதில் நாளின் முதல் பாதியில் 10800 மறு பாதியில் 10800.
2. ஒரு மூச்சென்பது நான்கு விநாடிகள்.

நேரத்தின் கணக்கு:
1. 24 மணிநேரம் x 60 நிமிடங்கள் = 1440 நிமிடங்கள்
2. 1440 நிமிடங்கள்x 60 விநாடிகள்= 86400 விநாடிகள்; 86400/21600 = 4 விநாடிகள்= 1 மூச்சு
3. 1 கடிகை என்பது 24 நிமிடங்கள்= 1440 விநாடிகள் (=360 மூச்சுக்கள் )

சித்தர் வான்வெளியின் நேரக் கணக்கு:
1. ஒரு சதுர்யுகம் = 1 கல்ப வருடம்/1000
2. 10 வார்த்தைகளைக் கொண்ட அட்சரம் = 1 மூச்சு (மூச்சு = 4 விநாடிகள்) 360 மூச்சுக்கள் = 1 கடிகை (=24 நிமிடங்கள்)
3. 60 கடிகைகள் = 1 நாள்
4. 1 சதுர்யுகம் = 4320000 சூரிய வருடங்கள்


ஒரு யுகம் நான்காக பிரிக்கப்பட்டுள்ளது:

1. கிரேதா யுகம் = 1728000 சூரிய வருடங்கள்

2. திரேதா யுகம் = 1296000 சூரிய வருடங்கள்

3. துவாபர யுகம் = 864000 சூரிய வருடங்கள்

4. கலி யுகம் = 432000 சூரிய வருடங்கள்

நந்தனார் கீர்த்தனையில் 'எட்டும் இரண்டமறியாத மூடன்' என்கிறார். 8 என்பது 'அ' காரமாக தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது. இரண்டு என்பது 'உ' காரமாக தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது. இதையே அகார உகாரம் என்று கூறுகின்றார்கள். 8*2=16 அங்குலம் ஓடும் சந்திரகலையை குறிக்கிறது.

'எண்ணும் எழுத்தும் கண்ணெனத்
தகும்'


ஓங்காரக்குடில் Ongarakudil
❤️🙏சித்தர் அறிவியல் Wisdom of Siththars❤️🙏
Aum Muruga ஓம் மு௫கா


Related Articles


2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html





Posted By Nathan Surya

Saturday, November 10, 2018

அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு

அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு

எல்லோருக்கும் பொதுவாக அருளிய அறிவுரை:-

யார் என்ன கூறினாலும், மனக்குழப்பம் அடையாமல், நாங்கள் முன்பே கூறியது போல்,  தவறை செய்கின்ற மனிதன், தொடர்ந்து தவறுக்கு மேல் தவறு செய்து, பாவத்திற்கு மேல் பாவத்தை சேர்க்கின்ற மனிதன் யார் சொன்னாலும் கேட்கிறானா? யார் சொன்னாலும் தன்னை மாற்றிக்கொள்கிறானா? தவறு செய்கின்ற மனிதனுக்கு இருக்கின்ற உறுதி ஏனடா நல்லது செய்கின்ற உனக்கு (மனிதனுக்கு) இல்லாமல் போகிறது? ஏன் தடுமாற்றம் வருகிறது?  ஏன் குழப்பம் வருகிறது? அங்கு இப்படி கூறுகிறார்கள், இங்கு இப்படி கூறுகிறார்கள். இதை இப்படி நம்பவேண்டும், அதை அப்படி நம்பவேண்டும், இங்கு கூறுவதையெல்லாம் ஏற்க முடியவில்லை, என்றெல்லாம் ஏன் குழப்பம் வருகிறது? குழப்பம் வருகிறது என்றாலே பாவங்கள் இன்னும் இருக்கிறது என்பதுதான் பொருள். எனவே தொடர்ந்து அறவழியில், சத்யவழியில் அனைவரும் வர நல்லாசிகள்.

கோவிலில் தொண்டுகள் செய்வதும், வழிபாடுகள் செய்வதும், யாகங்கள் செய்வதும், அபிஷேக ஆராதனைகள் செய்வதும் பெரிதல்ல. எந்த ஆலயத்தில் செய்ய வேண்டும் என்று சிலர் எண்ணுகிறார்களோ அந்த (கோவில்) நிர்வாகத்தோடு ஒத்துழைக்க முடிந்தால், அல்லது தொண்டு செய்கின்ற மனிதர்களோடு நிர்வாகம் சரியாக ஒத்துழைத்தால் மட்டும், செய்தால் போதும். இல்லையென்றால் எதிர்த்து வாதாடி, விதண்டாவாதம் செய்து "சித்தர்கள் இப்படிக் கூறியிருக்கிறார்கள். எனவேதான் நாங்கள் இப்படி செய்கிறோம். எனவே, இந்த பொருள்களை நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இந்த அபிஷேகத்தை செய்துதான் ஆகவேண்டும்" என்றெல்லாம், யாரிடமும் வாதாட வேண்டாம். ஒத்துவராத இடத்தைவிட்டு மௌனமாக விலகுவதே, எமது வழியில் வருகின்றவனுக்கு ஏற்புடையது.

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால், நல்விதமான வாழ்வு நிலை இவ்வுலகினில் மாந்தர்கள் பெறவேண்டும் என்பதற்காக, இவ்வுலகம் தோன்றிய நாள் முதல், இஃதொப்ப முயற்சியினை மாந்தர்கள் செய்துகொண்டே இருக்கிறார்கள். இத்தகு முயற்சியிலே தன் சக்தி தாண்டி, நிலைதாண்டி இருப்பதாக பல மாந்தர்களில், சில மாந்தர்கள் எண்ணும்பொழுதே தெய்வீகத்தின் துணையை நாடுகிறார்கள். இயம்புங்கால், இறைவனின் கடாக்ஷம் இருந்துவிட்டால், எல்லாவகையிலும் இன்பம்தான், போராட்டங்களற்ற வாழ்வுதான் என்று மனிதன் எண்ணுகிறான். ஒருவகையில் அது உண்மைதான் என்றாலும், இயம்புகின்றோம் இஃதொப்ப ஒரு நிலையில் அஃது நன்று என்றாலும் மெய்யாக, மெய்யாக, மெய்யாக, ஆணித்தரமாக உள்ளும், புறமும் எவ்வித நடிப்பும் இல்லாமல், மெய்யான ஆன்மீக வழியிலே இறைவழியிலே எந்த மனிதன் சென்றாலும் அல்லது எந்த உயிர் சென்றாலும் பல்வேறுவிதமான சோதனைகளை சந்தித்துதான் ஆகவேண்டும்.

வேறுவகையில் கூறப்போனால் கனகம், சோதனை, புடம் என்று வைத்துக்கொள்ளலாம். இஃது ஒருபுறமிருக்க இந்த சோதனை என்ற கட்டத்தை அடைவதற்கு முன்னால் அந்த உயிர் அல்லது ஆத்மா சுத்தி செய்யப்படவேண்டும். எங்ஙனம்? இதற்கு முன்னர் எடுத்த பிறவிகளில் சேர்த்த பாவங்களின் அடிப்படையிலிருந்து தோன்றிய நடப்பு பிறவிகளில் நடக்கின்ற நிகழ்வுகளால், அவமானங்களால், நம்பிக்கை துரோகங்களால், கைப்பொருளை இழப்பதால், உறவு சிக்கலால், கடுமையான ஏமாற்றத்தால், உலகியல் போராட்டத்தால், மட்டுமல்லாது இன்னும் பிறவழிகளிலும் பாவங்கள் குறைகிறது. இயம்புங்கால், அங்ஙனமாயின் ஒரு மனிதன் தன் புத்தியை பயன்படுத்தி தனக்கு வரக்கூடிய துன்பத்தை தவிர்த்துக் கொள்ளலாகாதா? தன்னுடைய சிந்தனையை திடமாக்கி, வளமாக்கி, துன்பமற்ற நிலையில் வாழ முயற்சி செய்யக்கூடாதா? என்றால் தவறல்ல. செய்யலாம்.

ஆயினும் மனிதன் செய்கின்ற முயற்சிகளையெல்லாம் தாண்டி, சாமர்த்தியங்களையெல்லாம் தாண்டி ஒரு மனிதனுக்கு எந்தவகையில் யாராலும், எதனாலும் மனித ரீதியாக, மனித மனப்பாங்கிலே துன்பங்கள் வருகிறதென்றால், மௌனமாக அதனை ஏற்றால் அது பாவக்கழிவிற்கு வழியாக இருக்கும். சரி, அப்படி ஏற்காவிட்டால், எதிர்த்தால் என்னவாகும்? ஒன்றும் ஆகப்போவதில்லை. துன்பத்தை ஒரு மனிதன் அதன் போக்கிலே அமைதியாக ஏற்றுக்கொண்டாலும், எதிர்த்து ஆர்பாட்டம் செய்தாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை. விதி தன் கடமையை செய்துகொண்டேதான் இருக்கும். எதிர்த்து ஆர்பாட்டம் செய்வதால் மேலும் மன உளைச்சல்தான், மனிதனுக்கு ஏற்படுகிறது. இஃதோடு மட்டுமல்லாது இன்னும் எத்தனையோ வழிகளிலெல்லாம் விதி மனிதனின் பாவங்களற்ற நிலைக்கு ஆட்படுத்ததான் இறைவனின் அருளால் படைக்கப்பட்டு, அந்த விதியானது மனித மதியிலே அமர்ந்துகொண்டும் ஆசைகள், மாயைகள் மூலமாகவும் வாழ்க்கையை ஒரு பிடிப்புள்ளதாக ஆக்கி, வாழ்க்கையில் எதனையோ சாதிக்கப்போவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, முடிவிலே ஒரு விரக்தியைத் தந்து, ஒரு ஏமாற்றத்தை தந்து, அதன் மூலம் ஒருசில பாவங்களை அந்த ஆத்மாவின் தன்மையிலிருந்து எடுக்கப் பார்க்கிறது. இதையெல்லாம் புரிந்து கொள்வதும், மேலும் அறிந்து கொள்வதும், அறிந்து கொள்வதையெல்லாம்  நடைமுறைபடுத்துவதும் கடினம்தான். அதற்கும் விதி இடம் தரவேண்டும்.

ஒரு ஞானியின் மனோபாவத்தில் வாழ்வதால் என்ன லாபம்? மனம் மரத்துப் போகவேண்டும். நூறாண்டுகள் வாழ்வதற்கு, ஆக்கையை தயார் நிலையில் வைக்கலாம். தவறில்லை. அடுத்த கணம் மரணம் வந்தால், அதை ஏற்கும் நிலையில் மனம், பக்குவமாக இருத்தல் வேண்டும். குடியிருக்கின்ற இல்லத்தை பேணிக்காப்பது போல எண்ணி, ஆக்கையை பேணிக் காத்திடல் அவசியம். நன்றாகத் தெரியும், இது இரவல் வாசம், நமது சொந்த இல்லம் அல்ல, என்று வேண்டுமானாலும் அந்த இல்லத்திற்கு உரிமையாளன் நம்மை இந்த இல்லத்தைவிட்டு அகன்று போகுமாறு ஆணையிடுவான் என்று தெரியும். இதனைப்போலவே இந்த ஆத்மா இந்த நடப்பு காலத்தில், இந்த மனித கூட்டுக்குள் இரவல் வாசமாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்வதும், புரிந்துகொள்வதை ஆழ பதிய வைத்துக்கொள்வதும், இப்படி மனதை ஞானியின் மனோநிலைக்காக மாற்றி, மாற்றி கொண்டு போவதற்கு முயற்சி செய்வதும்தான் நிரந்தரமான நிம்மதிக்கும், சந்தோசத்திற்கும் உண்டான வழியாகும்.

இறைவனின் கருணையாலே வாழ்வு நிலையிலே எடுத்த எடுப்பிலேயே எல்லா ஆத்மாக்களும் இந்த நிலைக்கு வருவது கடினம். என்றாலும் யாம் அடிக்கடி இதுபோன்ற தத்துவரீதியான விளக்கங்களைக் கூறுவதால் அதுவே பலருக்கு எரிச்சலையும், மன ஆதங்கத்தையும், சலிப்பையும் ஏற்படுத்துவதும், யாம் அறிந்ததே.  ஆயினும் ஒரு குழந்தைக்கு, பொம்மைகள் நிரந்தரமான உறவோ அல்லது நிரந்தரமான தேவையோ அல்ல என்பது ஈன்றோருக்கு தெரிவதுபோல, மனிதன் வாழ்கின்ற வாழ்க்கையிலே லௌகீக விஷயங்கள் அனைத்துமே, ஒரு குழந்தைக்கு தேவைப்படும் பொம்மைகள் போல்தான் என்பதை ஞானிகள் உணர்ந்திருப்பதால்தான், மெய்யான இறையருள் பெற்ற ஞானிகள் தமைநாடும் மாந்தர்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும், சதாசர்வகாலம் சிந்தனையோடு நெடிய, உயர்ந்த, தாராளமான பெருந்தன்மையோடு கூடிய இறை ஞான விழிப்புணர்வு வரவேண்டும் என்றுதான் விரும்புவார்களே தவிர, "நீ அனேக காலம் வாழப்பா, நீ நன்றாக வாழப்பா, இந்த லௌகீக சுகங்களைப் பெற்று வாழப்பா" என்று ஆசீர்வாதம் செய்யமாட்டார்கள். அங்ஙனம் பலர் செய்கிறார்களே என்றால் என்ன பொருள்? சரி, இன்னும் இந்த குழந்தை பொம்மைகளை விட்டுவிடத் தயாராக இல்லை என்பதே பொருளாகும்.


இறைவனின் கருணாகடாக்ஷத்திலே, இவனொத்த ஆத்மாக்கள் எம்மிடம் வரும்போதெல்லாம், அஃதொப்ப கிரகநிலையை அனுசரித்து இறைவன் அருளாலே கூறுகிறோம் என்றாலும்கூட, அடிப்படை விஷயம் யாதென்றால், விஷத்தை உண்டுவிட்ட ஒருவனுக்கு, அவன் உடலில் இருந்து விஷத்தை எடுப்பதற்கு மருத்துவர்கள் எங்ஙனம் போராட்டம் நடத்துகிறார்களோ, அந்த போராட்டம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக என்னென்ன வழிமுறைகளையெல்லாம் மருத்துவர்கள் கையாள்கிறார்களோ, அதைப்போலதான் பாவங்கள் என்ற கடுமையான விஷம் ஒரு மனிதனை பற்றியிருக்கும் பட்சத்திலே, அதை எடுப்பதற்கென்றுதான் பிறவிகளும், பிறவிகளில் பல்வேறுவிதமான சம்பவங்களும் நிகழ்கின்றன. அந்த சம்பவங்களை வெறும் உலகியல் ரீதியாக பார்க்கும்பொழுது கடினமாக, சோதனையாக, அவமானமாக, வேதனையாக தெரியும். ஆனாலும்கூட அதை ஒரு சிகிச்சை முறையாக பார்த்தால் நோயாளிக்கு அது எப்படி அவசியமோ அதைப்போல பாவங்களைக் கழிப்பதற்காக பிறவியெடுத்த ஆத்மாக்களுக்கு இஃதொப்ப லௌகீக அனுபவங்கள் அவசியம் என்பது புரியும். எனவே விஷத்தை உண்டுவிட்ட மனிதனுக்கு விஷமுறிப்பு சிகிச்சைபோல பாவங்களிலிருந்து ஒரு ஆத்மாவை விடுவித்து, நிரந்தரமாக தன்னை அறிவதற்கென்று எந்தப் பிறவியில் அந்த ஆத்மாவை தேர்ந்தெடுத்து தருகிறாரோ, அந்தப் பிறவியில் லௌகீக வெற்றிகள் அத்தனை எளிதாக கைவரப் பெறாமலும், சுற்றமும், உறவும் ஏளனம் செய்யும் வண்ணமும், ‘"பித்து பிடித்தவன், பிழைக்கத் தெரியாதவன்" என்றெல்லாம் நாமகரணம் சூட்டப்பட்டும் அந்த ஆத்மா, வாழத்தான் வேண்டும். நாங்கள் கூறவருவது ஒன்றுதான்.

இது போன்ற நிலையிலே மனம் தளராமல் திடம்கொண்டு வாழ்வதற்கு, இஃதொப்ப ஆத்மாக்கள் முயற்சியும், பயிற்சியும் செய்வதோடு விடாப்பிடியாக இறைவனின் திருவடியை பிடித்துக்கொள்வதுதான். இஃதொப்ப ஆத்மாக்களுக்கு ஒருவேளை, ஒருவேளை ஜீவ அருள் ஓலையிலே வாக்குகள் வாராது. இருப்பினும் யாம் இறைவன் அருளால் எஃதாவது ஒரு வழியில் வழிகாட்டிக்கொண்டே இருப்போம். இறைவன் அருளாலே தத்துவ நிலை தாண்டி, பிறவியெடுத்ததற்கு ஏதோ ஒரு இல்லறம் நடத்தி, வாரிசை பெற்று வாழவேண்டிய நிலையிலே அந்த வாழ்க்கையும் ஓரளவு அர்த்தம் உள்ளதாக வேண்டும் என்று எண்ணுகின்ற நிலையிலே, அஃதொப்ப ஒரு பங்கம் வராமல் வாழ யாம் இறைவனருளால் நல்லாசி கூறுகிறோம்.

via சித்தன்அருள்

Wisdom of Siddhas சித்தரியல்
Posted By Nathan Surya

Friday, November 9, 2018

முருகப் பெருமானின் பேரருள் பெற்றவர்கள்!



முருகப் பெருமானின் பேரருள் பெற்றவர்கள்!
Aum Muruga ஓம் மு௫கா

யதார்த்த உலகில் பலருக்கும் அந்த இறை அனுபவம் கிட்டியிருக்கும் என்றாலும், குறிப்பிட்ட சில மகான்களின் வாழ்க்கைச் சம்பவங்களே அவனருளுக்குப் பெரிய ஆதாரங்களாகத் திகழ்கின்றன. அந்தப் பெருமை பெற்ற சில மகான்களைப் பற்றி, இங்கே:

அகத்தியர், போகர், அவ்வையார், அருணகிரிநாதர், நக்கீரர், வள்ளலார் உள்ளிட்ட பல மகான்கள் இவரிடம் நிறைவுத் தீட்சை பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்திய மகான்கள். உலகில் முருகனை அறியாத தமிழர்கள், முருகனை வணங்காத தமிழர்கள் எந்த நாட்டிலும் இல்லை.

அகத்தியர்தான் முருகப்பெருமானின் முதல் சீடர். தமிழை வளர்த்த சித்தர் அகத்தியர். முருகனின் ஆணைக்கிணங்க அகத்தியம் என்ற தமிழ் இலக்கண நூலை இயற்றியவர். சித்தர்களுக்கெல்லாம் சித்தர்.

ஆதிசங்கரர் தீராத வயிற்றுவலியால் துடித்தபோது திருச்செந்தூர் முருகனின் மீது சுப்ரமண்ய புஜங்கம் என்ற அருமையானதோத்திரத்தைப் பாட, அவரின் வயிற்றுவலி முருகன் அருளால் நீங்கியது. கடல் சூழ்ந்திருந்த அந்த தலத்தை, அவர் பாடிய சுப்ரமண்ய புஜங்கம்தான் சுனாமிப் பேரழிவிலிருந்து காத்தது என்று அப்பகுதி பக்தர்கள் இன்றும் நினைத்து ஆதிசங்கரருக்கு நன்றி செலுத்துகிறார்கள்.

நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று கூறிய நக்கீரர், தமிழ் மீதும் தமிழ்க்கடவுள் முருகன் மீதும் பற்றுடையவர். அவர் வெப்பு நோயால் பெரும் துன்பப்பட்டபோது, முருகனை திருமுருகாற்றுப்படை எனும் துதியால் துதித்தார். அதனால் மகிழ்ந்த முருகன் அவருக்கு தரிசனம் தந்து திருக்காளத்திக்குச் செல்ல பணித்தான். அவரும் அதன்படி அங்கு சென்று பொன்முகலியாற்றில் மூழ்கி எழுந்து, தன் நோய் நீங்கப் பெற்றார்.

காஞ்சியம்பதியில் வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு கந்தபுராணத்தை எழுதுவதற்கு ‘திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்’ என அடி எடுத்துத் தந்தது முருகப்பெருமானே! இதைப் பலரும் நம்பாததால் முருகனே ஒரு புலவர் வேடத்தில் வந்து தன்னை மெய்ப்பித்து கச்சியப்பரின் புகழை உலகறியச் செய்தார்.

அருணகிரிநாதர் தீய வழியில் சென்று, அதன் விளைவுகளால் மனம் வருந்த, முருகன் அவரைத் தடுத்தாட்கொண்டு திருப்புகழ் பாடப்பணித்தார். அதுமட்டுமன்றி, ‘முத்து..’ என்ற முதற்சொல் கொடுத்து அவரைத் தொடரச் செய்தார். பகைவரின் சூழ்ச்சியால் கிளியாக மாறிய அருணகிரிநாதரின் புகழை உலகறியச் செய்ததுடன் மதுரை மீனாட்சியம்மனுடைய திருத்தோளில் அமரும் பாக்கியத்தையும் அவருக்கு முருகன் அருளினார்.

பிறந்ததிலிருந்து ஐந்து வயது வரை வாய் பேச இயலாதவராக இருந்தவர் குமரகுருபரர். அவர் திருச்செந்தூர் முருகனின் அருளால் பேசும் ஆற்றல் பெற்று, அதற்கு நன்றியறிதலாக கந்தர் கலி வெண்பா எனும் துதியைப் பாடி, அதுமுதல் கவி இயற்றும் திறமையையும் பெற்றார்.

பாம்பன் சுவாமிகள் முருகப் பெருமானின் மீது அளவற்ற பக்தி கொண்டவர். முருகனை அழைத்துத் தன்னுடன் அமர்ந்து பால் சோறு சாப்பிடச் செய்தவர்! இது அவருடைய பக்தியின் சிறப்பு! தன் வாழ்க்கையில் நேர்ந்த பல இன்னல்களை தான் இயற்றிய ஷண்முக கவசத்தைப் பாராயணம் செய்தே தீர்த்துக் கொண்டார் அவர். முதுமைக் காலத்தில் அவர் கால் எலும்பு முறிய உடனே அவர் முருகனைப் பாட, எங்கிருந்தோ வந்த இரு மயில்கள் அவர் படுத்திருந்த மருத்துவமனை ஜன்னல் வழியே பறந்து வந்து அவர் காலை தம் தோகையால் வருட, மருத்துவர்களே வியந்து போற்றும்படி அவர் கால் எலும்புகள் ஒன்று சேர்ந்தன.

ஔவையார் சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு, தனக்கிருந்த தமிழ் கர்வத்தை அடக்கிய முருகனின் தரிசனம் பெற்று அவன் அருளையும் பெற்றார்.

போகர் பெரும் சித்தர். முருகப் பெருமான் திருவருளால் நவபாஷாணங்களினால் இவர் உருவாக்கிய முருகனின் திருவுருவமே இன்று பழநியில் மூலவர் முருகனாய் அருளொளி பரப்புகிறார்.

வால்மீகி ராமாயணத்தில் பாலகாண்டத்தில் விசுவாமித்திரர் ராம லட்சுமணர்களுக்குச் சொல்கிறார்: `குமார சம்பவக் கதையைச் சொன்னேன். இது தனத்தையும் கொடுக்கும். புண்ணியத்தையும் கொடுக்கும். இந்த பூலோகத்தில் மட்டும் ஒரு மனிதன் கார்த்திகேயனிடம் பக்தி வைத்துவிட்டால் போதும், தீர்க்காயுள், புத்திர செல்வம், சௌபாக்கியம் எல்லாம் அவனுக்குக் கிடைத்துவிடும். முடிவிலோ கந்த லோகத்துக்கே போய் அவருடனேயே நித்திய வாசம் செய்யலாம்.'' இப்படிச் சொல்கிறார், விசுவாமித்திரர்.

ஆதி அகத்தியர் சன்மார்க்க சங்கம்


Aum Muruga ஓம் மு௫கா

ஓங்காரக்குடில் Ongarakudil

சித்தர் அறிவியல் Wisdom of Siththars



நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya